இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.03.2023-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 9 ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். இது குறித்த தகவல் தங்களுக்குக் மெயில் மூலம் அனுப்பிவைக்கப்படும் முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு மெயில் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
தனித்தாளில் விண்ணபிப்பவர்கள் தபால் மூலம் அனுப்பவேண்டிய முகவரி:மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.